
சென்னை::பெருசு படத்தின் மூலம் நாயகியாக வந்தவர் நீபா. அம்மாவும் அப்பாவும் நடன இயக்குநர்களாக இருந்தும் நடனம் பக்கம் செல்லாமல் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் களமிறங்கினார். ஆனால் சினிமாதுறை கை கொடுக்கவில்லை. சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தினார். பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாய்ப்புகள் வந்தன. தங்கர்பச்சன் இயக்கிய பள்ளிக்கூடம் படத்தில் சீமானுக்கு ஜோடியானார். காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியானார்.
இப்பொழுது அதேபோல் பேசப்படும் கதாபாத்திரம் ஒன்று விக்ரம் நடிக்கும் கரிகாலன் படத்தில் கிடைத்திருக்கிறதாம். உறவுகள் தொடரில் சுவேதாவாக நடித்தவருக்கு பதிலாக இப்போது நீபா நடிக்கிறார். 750 வது எடிசோடுகளை தாண்டி உறவுகள் போய்க்கொண்டிருக்கிறது. சூட்டிங் பிஸியில் இருந்தவரிடம் பேசியதில் சிக்கியவை.
ஹீரோயினாக பெரிய அளவில் சாதிக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. அதனால்தான் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பினேன். சீரியலில் நடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. நடிக்க மட்டுமே வாய்ப்புகள் நிறைய உண்டு.
உறவுகள் தொடரில் இன்னும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைய இருக்கு. ஆயிரம் எபிசோடுகளை நிச்சயம் தாண்டும் என்று கூறினார். காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியா காமெடியில் கலக்கினதைத் தொடர்ந்து, விக்ரமோட 'கரிகாலன்' படத்துலயும் ஒரு சூப்பர் ரோல் கிடைச்சிருக்கு என்று கூறினார்.
ஆல் த பெஸ்ட் நீபா! கலக்குங்க!
Comments
Post a Comment