எஸ்.ஜே.சூர்யாவின் இசை : இசையமைப்பாளர்களை தாக்கும் படமா?!!!

Saturday, June, 02, 2012
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடிக்கும் இசை படம், இசையமைப்பாளர்களை தாக்கி எடுக்கப்படுவதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. ஹீரோவாக நடித்து அடுத்தடுத்து தோல்வி படங்களை தந்தார் எஸ்.ஜே.சூர்யா. இதையடுத்து தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து புலி படத்தை இயக்கினார். இதில் அவர் நடிக்கவில்லை. இருந்தும் படம் ஓடவில்லை. இதையடுத்து பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார். இப்போது சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தானே ஹீரோவாக நடித்து, ஒரு படத்தை இயக்குகிறார். இதற்கு இசை என தலைப்பிட்டுள்ளார். இப்படத்துக்கு இசையும் சூர்யாதான்.

2 சினிமா இசையமைப்பாளர்கள் இடையே நடக்கும் மோதல்தான் கதையாம். படத்தில் சூர்யா ஒரு இசையமைப்பாளர். மற்றொருவர், பிரகாஷ் ராஜ். இந்த படத்தில் இசையமைப்பாளர்களுக்கு இடையிலான ஈகோ பிரச்னை பற்றி சூர்யா கதை எழுதியிருப்பதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில் இசையமைப்பாளர்கள் பற்றிய சர்ச்சைக்குரிய விஷயங்களையும் அவர் கூறப்போவதாக தெரிகிறது. முதல் முறையாக ஹீரோ ஆகும்போது அதில் ஜெயிக்க, நியூ படத்தில் ஆபாசத்தை திணித்து சூர்யா வெற்றி பெற்றார். இப்போது மீண்டும் அதுபோன்ற ஒரு வெற்றி அவருக்கு தேவைப்படுகிறது. இதனால் சர்ச்சைக்குரிய விஷயத்தை அவர் கையில் எடுத்திருக்கிறார் என கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

Comments