Tuesday,12th of June 2012சென்னை:* ஸ்ருதிஹாசனுக்கு ஜூனியர் என்.டி. ராமராவுடன் நடிக்க ரொம்ப ஆசையாம் வாய்ப் புக்காக காத்திருக்கிறார்.
* கன்னடத்தில் தயாராகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் வீனா மாலிக்குடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பார்த்திபன்.
* தமிழ், கன்னடத்தில் உருவாகும் ‘சாருலதா’ படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிள் வேடத்தில் நடிக்கிறார் பிரியாமணி.
* ‘விஸ்வரூபம்’ பட கதையை கடந்த 7 ஆண்டுகளாக மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தாராம் கமல்ஹாசன்.
* சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் நடிக்க வேண்டுமானால் கால்ஷீட் தர 6 மாசம் டைம் தரவேண்டும் என்கிற சிவா, யதார்த்தமாக நடிக்க வேண்டுமானால் உடனே கால்ஷீட் ரெடியாம்.
டி.ராஜேந்தர் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் மும்பை மாடல் நிஹாரிகா கரீர்.
‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’, ‘தி ரிட்டர்ன் ஆப் தி கிங்’ போன்ற ஹாலிவுட் படங்களை தயாரித்த பேரி ஆஸ்போன் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன்.
‘குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்’ பட இயக்குனர் ராஜாமோகன் இயக்கும் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் மோன் குஜார்.
ஜப்பான், ஆங்கில மொழியில் டப்பிங் செய்யப்படவுள்ள ரஜினியின் ‘கோச்சடையான்’ பட பாடல் கேசட் இம்மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சவுந்தர்யா.
‘வெயில்’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.குமார் தனது 25வது படமாக ‘தாண்டவம்’ படத்துக்கு இசை அமைக்கிறார்.
Comments
Post a Comment