
சென்னை::லண்டன் ஓட்டலில் ரூம் ஒதுக்காததால் ஷூட்டிங் போக மறுத்து அடம் பிடித்தார் லட்சுமிராய். தெய்வத் திருமகள் படத்தை அடுத்து விஜய் இயக்கும் ‘தாண்டவம் பட ஷூட்டிங் லண்டனில் நடக்கிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க லட்சுமிராய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றார். நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. நேராக அங்கு சென்று மேக்அப் போட்டுக்கொண்டு ஷூட்டிங்கிற்கு வரும்படி இயக்குனர் கூறி இருந்தார். இதையடுத்து ஓட்டல் அறைக்கு சென்ற லட்சுமிராய் அதிர்ச்சி அடைந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட அறை வசதியாக இல்லாததால் ஷூட்டிங் செல்லாமல் தவிர்த்தார். இதனால் பிரச்னை எழுந்தது. இது குறித்து இயக்குனர் விஜய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையை அவருக்கு தருமாறு கூறினார். அதன்பிறகு லட்சுராய் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்தார் என்று பட குழுவினர் தெரிவித்திருந்தனர். இது பற்றி லட்சுமிராயிடம் கேட்டபோது, ‘லண்டன் ஓட்டலில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றேன். ஆனால் அங்கு வேறு யாரோ தங்கி இருந்தார். இதனால் அப்செட் ஆனேன். 45 நிமிடம் ஓட்டல் லாபியிலேயே காத்திருந்தேன். இதுபற்றி தகவல் தெரிவித்தபிறகு எனக்கு வேறு அறை ஒதுக்கப்பட்டது. இதுதான் நடந்தது. மற்றபடி பிரச்னை எதுவும் செய்ய வில்லை என்றார்.
Comments
Post a Comment