Saturday, 9th of June 2012
ஓரின சேர்க்கையை ஆதரிப்பதற்கு வெட்கப்படவில்லை’’ என்கிறார் பாலிவுட் ஹீரோயின் வீனா மாலிக். பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக். பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். திடீரென்று காணாமல் போய்விட்டதாகவும் அவரை கடத்தி விட்டதாகவும் தகவல் வெளியானது. அதை மறுத்து மீண்டும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தோன்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் கன்னடத்தில் உருவாகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமான ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே வித்யாபாலன் நடித்து, இந்தியில் உருவான படத்துக்கு ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ எனப் பெயரிட்டதால் வீனா மாலிக்கும் கன்னட படத்துக்கு அதே தலைப்பை வைக்க இந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் எதிர்ப்பு தெரிவித்தார். அடிக்கடி பிரச்னைகளில் சிக்கும் வீனா மாலிக் தற்போது ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.
இதுபற்றி அவர்கூறும்போது, ‘‘ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில் வெட்கப்படவில்லை. இது சீர்கேடான விஷயம் இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிடக் கூடாது. இப்போதெல்லாம் செக்ஸ் பற்றி வெளிப்படையாக மக்கள் பேசுகின்றனர். இது வரவேற்கத்தக்கது. அவர்கள் ஓரின சேர்க்கையையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு விரைவில் பக்குவம் அடைவார்கள்’’ என்றார்.

Comments
Post a Comment