Tuesday,12th of June 2012சென்னை:சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்த தபாங் படமும் ஹிட், அதன் தெலுங்கு ரீமேக்கான கப்பார் சிங்கும் ஹிட். ஆனால் தமிழ் ரீமேக்கான ஒஸ்தி மட்டும் ஓடவில்லையே.
சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா ஜோடி சேர்ந்த தபாங் படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஒரே நாளில் சோனாக்ஷி புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். அந்த படத்தில் வந்த முன்னி பத்னாம் பாடலும் பட்டி, தொட்டியெல்லாம் பரவியது. இப்படி கண்டமேனிக்கு ஓடிய தபாங்கை தமிழில் ரீமேக் செய்தனர். இதில் சல்மான் கான் கதாபாத்திரத்தில் சிம்புவும், சோனாக்ஷி ரோலில் ரிச்சாவும் நடித்தனர். இந்தியைப் போன்று தமிழிலும் ஓடிவிடும் என்று நினைத்தனர். ஆனால் படம் நகரக் கூடவில்லை.
திரையரங்குகளில் படத்தைப் பார்த்தவர்கள் டென்ஷன் ஆனது தான் மிச்சம். தமிழில் ஊத்திக்கிட்டாலும் தபாங்கை தெலுங்கில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசனை வைத்து எடுத்தனர். படம் ஆஹா, ஓஹோ என்று ஓடி வசூலில் சாதனை படைத்தது. நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்காத பவன் கல்யாணுக்கு இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தெலுங்கில் ஹிட் கொடுக்காத ஹீரோயினாக இருந்த ஸ்ருதிக்கு இந்த படம் முதல் ஹிட்டானதுடன் அவருக்கு நல்ல பெயரும் வாங்கிக் கொடுத்தது. மேலும் தபாங் இரணடாம் பாகமும் எடுக்கவிருக்கின்றனர்.
இப்படி தபாங்கும், கப்பார் சிங்கும் ஹிட்டாக ஒஸ்தி மட்டும் ஊத்திக்கிட்டதேன். தேசிய விருது வேண்டாம், கை தட்டல் போதும், சீரியசான படம் வேண்டாம் மாஸ் படம் போதும் என்ற சிம்புவின் இந்த மாஸ் மட்டும் ஏன் ஒர்க் அவுட் ஆகவில்லை. இது தான் தற்போது கோலிவுட்டில் பலரும் கேட்கும் கேள்வி.
ஒஸ்தி ஓடாடததற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்...
Comments
Post a Comment