இயக்குனருடன் மோதல் : படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார் தனுஷ்!!!

Monday, 25th of June 2012
சென்னை::நடிக்க அழைக்காமல் இயக்குனர் காக்க வைத்ததால் இந்தி படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறினார் தனுஷ். தமிழ், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் தனுஷ் நடிக்கும் படம் ‘மரியான்Õ. பரத்பாலா இயக்குகிறார். இதன் ஷூட்டிங் ஆப்ரிக¢க நாடான நமீபியாவில் நடந்தது. ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக மேக்கப்புடன் செட்டுக்கு வந்தார் தனுஷ். ஆனால் மற்ற நடிகர்கள் நடித்த காட்சிகளை இயக்குனர் படமாக்கிக்கொண்டிருந்ததால் அமைதியாக காத்திருந்தார். தான் வந்திருப்பதை இயக்குனரிடம் தெரிவிக்குமாறு உதவியாளரிடம் சொல்லி அனுப்பினார். ஆனாலும் தனுஷை கண்டுகொள்ளாமல் மற்ற நடிகர்களின் காட்சிகளை படமாக்குவதில் பிஸியாக இருந்தார் இயக்குனர் பரத்பாலா. இதனால் தனுஷ் கோபம் அடைந்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி தனுஷ் நடிக்கும் காட்சிகளைத்தான் படமாக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அதை மாற்றிய இயக்குனர் வேறு நடிகர்களின் காட்சிகளை படமாக்க திட்டமிட்டார். இந்த மாற்றம் பற்றி தனுஷுக்கு தெரிவிக்காததால் அவர் டென்ஷனாக காணப்பட்டார். நீண்ட நேரம் காக்க வைத்ததால் அங்கிருந்தவரை அழைத்து, ‘இனிமேல் ஷூட்டிங்கில் மாற்றம் செய்தால் அதை எனக்கு தெரியப்படுத்துங்கள். மீண்டும் எப்போது எனது காட்சி படமாக்கப்படும் என்ற விவரத்தை இயக்குனரையே என்னிடம் தெரிவிக்கச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வெளியேறினார். இதையறிந்து பதற்றம் அடைந்த இயக்குனர் தனுஷை தொடர்பு கொண்டார். அவரிடம்பேசிய தனுஷ், ‘தமிழ்நாட்டில் நானும் பெரிய நடிகன்தான் என்று கோபத்துடன் கூறினார். இதனால் பட குழுவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments