மற்ற ஹீரோயின்கள் மாதிரி அலப்பறை செய்யமாட்டேன் : அசின்!!!

Tuesday, June,05, 2012
மற்ற ஹீரோயின்களைவிட சிறந்தவள் என்பதை நிரூபிக்க சினிமாவுக்கு வரவில்லை என்றார் அசின். அவர் கூறியதாவது: ‘கில்லாடி 786' படத்தில் மீண்டும் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்கிறீர்களா? என்கிறார்கள். இப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தம் எதிலும் இதுவரை நான் கையெழுத்திடவில்லை. அதற்கு முன் எப்படி கூறுவது. இதை உறுதிபடுத்துவதற்கு குறிப்பிட்ட பட நிறுவனத்திடம்தான் கேட்க வேண்டும். ஒரு சில ஹீரோயின்களைப்போல் இந்த படத்துக்காக என்னை கேட்டிருக்கிறார்கள், இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன் என தயாரிப்பாளர் சொல்வதற்கு முன்பே நான் தம்பட்டம் அடித்துக் கொள்ளமாட்டேன்.

ஹவுஸ்புல் 2 படம் வெற்றி பற்றி கேட்கிறார்கள். இப்பட ஹீரோ அக்ஷய்குமார் தொழில் ரீதியான நடிகர் மட்டுமல்ல, அனுபவம் வாய்ந்தவர். இதனால் அவருடன் எனக்கு கெமிஸ்ட்ரி நன்கு ஒத்துப்போனது. இன்னும்கூட நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை எதிர்பார்க்கிறேன். பாலிவுட்டில் நிலவும் போட்டி பற்றி கேட்கிறார்கள். இதுவரை நான் நன்கு பணியாற்றி வருகிறேன். ரசிகர்களிடமும் வரவேற்பு உள்ளது.

இந்த ஹீரோயினைவிட நான்தான் சிறந்தவள், அவரைவிட நான்தான் வெற்றிகளை அதிகம் தந்த ஹீரோயின் என்று நிரூபிப்பதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை. எனக்கு எது நல்லது என படுகிறதோ அதைச் செய்கிறேன். இவ்வாறு அசின் கூறினார்.

Comments