
சென்னை:துரை தயாநிதியின் க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
'மங்காத்தா', 'தூங்கா நகரம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் துரை தயாநிதி, தற்போது தனது உறவினரும், 'வம்சம்', 'மெளனகுரு' ஆகிய வெற்றிப் படங்களின் நாயகனுமான அருள்ந்தியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார்.
இன்னும் தனைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 12) சென்னையில் தொடங்கியது. கணேஷ் வினாயக் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் பவன், முருகதாஸ் மற்றும் தருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செந்தில்ராஜன், கலை ராஜீவன், இசை ரகுநந்தன், சண்டைப் பயிற்சி திலீப் சுப்புராயண், படத்தொகுப்பு டி.எஸ்.சுரேஷ், மக்கள் தொடர்பு நிகில்.
Comments
Post a Comment