காஷ்மீரில் காணாமல் போன பாக். நடிகை துபாயில் தாவூத் கூட்டாளியுடன் குடித்தனம்!!!

Sunday, 24th of June 2012
சென்னை::பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்கு வந்து காணாமல் போனதாக கூறப்பட்ட நடிகை லைலா கான், தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ஒருவனை மணந்து கொண்டு துபாயில் குடித்தனம் நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் லைலா கான். இவர் ஒரு நடிகை. வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாதக் கும்பலுக்கும், இவருக்கும் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உண்டு. இந்தநிலையில், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இவர் தனது தாயார் மற்றும் தங்கை, குடும்பத்தினருடன் காஷ்மீர் வந்தார். வந்த இடத்தில் காணாமல் போனார்.

அவரை யாராவது கடத்தியிருக்கலாம், கொன்றிருக்கலாம் என்று சந்தேகம் வலுத்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பர்வேஸ் அகமது தக் என்பவரை காஷ்மீர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

காணாமல் போன நடிகை லைலாகான் உயிரோடுதான் இருக்கிறாராம். துபாயில் அவர் தற்போது வசித்து வருவதாகவும், நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியை மணந்து கொண்டு அவருடன் குடித்தனம் இருந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக பர்வேஸ் கூறுகையில், லைலாவும் அவரது குடும்பத்தினர் ஐந்து பேரும் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவை விட்டு தப்பி விட்டனர். அவர்கள் தற்போது துபாயில் உள்ளனர்.

லைலா, தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி சோனு என்பவரை மணந்து கொண்டுள்ளார். அவருடன் வசித்து வருகிறார் என்றார் பர்வேஸ்.

பர்வேஸ்தான் லைலா கானை கார் மூலம் கிஷ்த்வார் என்ற இடத்திற்குக் கொண்டு போய் விட்டவர் ஆவார். இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த அவரைப் பிடித்து விசாரித்த பிறகே லைலா கான் மர்மம் விலகியுள்ளது.

Comments