Thursday, June, 07, 2012
பாலிவுட்டில் கிசுகிசுக்களால் விரக்தி அடைந்த இலியானா, சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு ஓட்டலில் தங்கி நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இலியானா. தமிழில் ‘நண்பன் படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து இந்தியிலும் கால்பதிக்க முடிவு செய்தார். ‘பர்பி என்ற படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து நடித்து வருகிறார். தென்னிந்திய நடிகைகளை குறிவைத்து தாக்கும் பாலிவுட் மீடியா, இலியானாவையும் விட்டு வைக்கவில்லை. பிரியங்கா சோப்ராவுடன் மோதல், தயாரிப்பாளருடன் மோதல், ரன்பீருடன் நெருக்கம் என்று அவரை பற்றி தினம் தினம் ஒரு கிசுகிசு கிளப்பிவிடுகிறார்கள்.
இதனால் விரக்தி அடைந்துள்ள அவர் பாலிவுட்டுக்கு முழுக்குபோட்டுவிட்டு மீண்டும் தென்னிந்திய படங்களிலேயே கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. பெற்றோருடன் கோவாவில் தங்கி இருக்கும் இலியானாவுக்கு மும்பை பாந்த்ராவில் சொந்த வீடு உள்ளது. பாலிவுட்டில் கால் பதிக்க நினைக்கும் தனக்கு எதிராக சிலர் அடிக்கடி பிரச்னைகளை கிளப்பி விடுவதில் மனம் நொந்தார். இதனாலேயே சொந்த வீடு இருந்தும் அதில் தங்காமல், நட்சத்திர ஓட்டலில் தங்கி பர்பி படத்தில் நடிக்கிறார். அந்த வீட்டை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். சீக்கிரமே அதை விற்கவும் யோசித்திருக்கிறாராம்.

Comments
Post a Comment