படப்பிடிப்பில் விஜய்க்கு காயம் ஏற்பட்டது எப்படி?: ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம்!!!

Monday, 11th of June 2012
சென்னை::ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் 'துப்பாக்கி' படத்தில் விஜய் நடித்து வருகிறார். மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பின் போது விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விஜய் தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியதாவது:-

'துப்பாக்கி' படத்துக்காக சண்டைக் காட்சியொன்றை படமாக்கினோம். விஜய் உயரத்தில் இருந்து குதிப்பதுபோல் சீன்களை எடுத்தோம். அவர் தரையில் குதித்தபோது திடீரென கால் இடறியது. இதில் அவர் மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. விஜய் அப்போது மூட்டு பெல்ட் அணிந்திருக்கவில்லை. விஜய் கால் வலியோடு அக்காட்சியில் நடித்து முடித்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூட்டு காயத்துக்கு லண்டன் ஆஸ்பத்திரியில் விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஓரிரு தினங்களில் குணமாகி திரும்புவார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

'துப்பாக்கி' படத்துக்கு இன்னும் 4 நாட்கள் படப்பிடிப்பே பாக்கி உள்ளது. ஒரு பாடல் காட்சியும் எடுக்க வேண்டி உள்ளது. விஜய் லண்டனில் இருந்து திரும்பியதும் அவற்றை படமாக்க திட்டமிட்டு உள்ளனர்

Comments