சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - சகுனி முதலிடம்!!!

Tuesday, 26th of June 2012
சென்னை::

5. தடையறத் தாக்க
புதுப்படங்கள் எதுவும் பாக்ஸ் ஆஃபிஸ் பக்கமே தென்படவில்லை. தடையறத்தாக்க சென்ற வார இறுதியில் 84 ஆயிரங்களை மட்டும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அப்படியானால் மற்றப் படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். இதுவரை சென்னையில் இப்படம் 50 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. முரட்டுக்காளை
சென்ற வார இறுதியில் இப்படம் 1.8 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் இதுவரை வசூலித்துள்ளது 26 லட்சங்கள் மட்டுமே.

3. கலகலப்பு
முரட்டுக்காளைக்கு அப்படியே உல்டா இந்தப் படம். சென்ற வார இறுதியில் 3.8 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை சென்னையில் 6.3 கோடிகளை தனதாக்கியுள்ளது.

2. மனம் கொத்திப் பறவை
சிவ கார்த்திகேயனின் இமேஜை சற்று உயர்த்தியிருக்கும் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 4.6 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் வசூல் 1.46 கோடி.

1. சகுனி
எதிர்பார்த்தது போல் சகுனி முதல் இடத்தில். முதல் மூன்று நாட்களில் இப்படம் 2.27 கோடிகளை வசூலித்துள்ளது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் இரண்டு கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை இதன் மூலம் சகுனி பெற்றிருக்கிறது. ஆனா‌ல் திங்கள்கிழமையே பல திரையரங்குகள் காற்று வாங்கின என்பது துரதிர்ஷ்டமான செய்தி.

Comments