
சென்னை::வல்லவன், கருப்பசாமி குத்தகைகாரர், படிக்காதவன், அம்பாசமுத்திரத்தில் அம்பானி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் சங்கர். பார்பதற்கு சின்ன பையன் போல இருக்கும் இவர், நடிகர்கள் வடிவேலு, கஞ்சாகருப்பு, கருணாஸ் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார். மதுரை திருமங்கலத்தை சேர்ந்த இவருக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நடிகர்கள் வடிவேலு, கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, போண்டா மணி, பெரியகருப்பு தேவர், டைரக்டர் ராசு மதுரவன் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். சங்கர் தற்போது பரிமளா திரையரங்கம், கள்ளச்சிரிப்பழகா, மைக்செட் பாண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறரார்
Comments
Post a Comment