கார்த்திக்காக சகுனியில் காமெடி பீசான அனுஷ்கா!!!

Sunday, 17th of June 2012
சென்னை::கார்த்தி கேட்டுக் கொண்டதால் அவரது சகுனி படத்தில் அனுஷ்கா காமெடி போலீசாக வருகிறார்.

கார்த்தி, பிரணீதா நடித்துள்ள படம் சகுனி. இது தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. புது முகம் சங்கர் தயால் இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சூர்யாவுக்கு எப்படி கஜினி அமைந்ததோ அது போன்று கார்த்திக்கு சகுனி அமையும் என்று கூறப்படுகிறது. சகுனு வரும் 22ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்த படத்தில் அனுஷ்கா கெஸ்ட் ரோலில் காமெடி போலீசாக வருகிறாராம். அனுஷ்கா கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர்கள் நல்ல நண்பர்களாகிவிட்டார்களாம். இதையடுத்து கார்த்தி தனது சகுனி படத்தில் கெஸ்ட் ரோலில் வருமாறு அனுஷ்காவை கேட்டுள்ளார். அவரும் உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.

படத்தில் அனுஷ்கா, சந்தானம், கார்த்தி ஆகியோருடன் சேர்ந்து காமெடி செய்துள்ளராம். அனுஷ்கா வரும் காட்சிகளில் அரங்கம் அதிரும் என்று கூறப்படுகிறது. படத்தில் அவர் வரும் காட்சிகள் பெரிதும் பேசப்படுமாம். கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த அனுஷ்கா தற்போது காமெடி சீன்களில் வந்து ரசிகர்களை சிரிக்க வைக்கப்போகிறார்.

அனுஷ்காவுக்கு காமெடி கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments