கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள சகுனியில் ரஜினி, கமல் பெயரைப் பயன்படுத்தியது பெரிய வெற்றியைத் தந்துள்ளது-கார்த்தி!!!

சென்னை::கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள படம் சகுனி. அரசியல் பொழுதுபோக்குப் படமான சகுனி, தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியானது.
இரண்டு மொழிகளிலுமே படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், வசூல் சாதனை புரிந்துள்ளதாகவும் அறிவித்து, அந்த வெற்றியைக் கொண்டாட நேற்று பிரஸ் மீட் வைத்திருந்தனர்.
நேற்று காலை ஹைதராபாதில் வெற்றிச் சந்திப்பை நடத்தியவர்கள், மாலையில் சென்னையிலும் நடத்தினர். இரண்டு இடங்களிலும் ஹீரோ கார்த்தி, ஹீரோயின் ப்ரணீதா பங்கேற்றனர்.
சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் கார்த்தி - ப்ரணீதாவுடன், நாசர், மனோபாலா, விநியோகஸ்தர் கலைப்புலி சேகரன், இயக்குநர் சங்கர் தயாள், ஆல்பர்ட் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
படத்தின் வெற்றி குறித்து கலைப்புலி சேகரன் பேசுகையில், "தம்பி கார்த்தி இப்போது வசூல் ராஜாவாகிவிட்டார். சகுனியில் வெற்றி வீரனாகத் திகழ்கிறார். இந்தப் படம் பெரிய ஓபனிங்கை தந்துள்ளது. விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மகிழும் அளவுக்கு வசூல் நன்றாக உள்ளது," என்றார்.
ஆல்பர்ட் மாரியப்பன் பேசுகையில், "சகுனி படத்தின் ஓபனிங் பிரமாதம். இதன் மூலம் கார்த்தி ஒரு மாஸ் ஹீரோவாகிவிட்டார்," என்றார்.
ஹீரோ கார்த்தி கூறுகையில், "இந்தப் படம் உண்மையிலேயே நல்ல பொழுதுபோக்குப் படமாக வெற்றி பெற்றுள்ளது. எனக்கு கிடைத்த பீட்பேக்கும் அதுதான். படத்துக்குப் போனா ஜாலியா இரண்டே முக்கால் மணிநேரம் இருந்துவிட்டு வரலாம் என்ற பேச்சை இந்தப் படம் கிளப்பியுள்ளது.
இந்தப் படத்தில் சந்தானமும் நானும் ரஜினி - கமலாக வருகிறோம். ரஜினி - கமல் பெயரை எங்கள் பாத்திரங்களுக்கு வைத்தது ரசிகர்களிடம் நன்றாக எடுபட்டுள்ளது. பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
அதிக அரங்குகளில் வெளியிட்டிருப்பதால் நல்ல வசூலும் குவிகிறது," என்றார்.
Comments
Post a Comment