ராணாவில் ரஜினி ஜோடி தீபிகா இல்லை: .எஸ். ரவிக்குமார்!!!

Monday, 18th of June 2012
சென்னை::ராணா படத்தில் ரஜினிகாந்தின் ஜோடி தீபிகா இல்லை என்று அப்படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கவிருந்த படம் ராணா. படப்பிடிப்பு துவங்கிய முதல் நாள் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று குணமடைந்தார். நாடு திரும்பிய பிறகு ராணா படப்பிடிப்பு துவங்காமல் கோச்சடையான் துவங்கியது.

ராணாவில் நடிக்க ஒப்பந்தமான தீபிகாவை கோச்சடையானில் நாயகி ஆக்கினர். தற்போது படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. வரும் தீபாவளிக்கு கோச்சடையான் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு ரஜினிகாந்த் கே.எஸ். ரவிக்குமாரின் ராணாவில் நடிப்பார். ஆனால் நாயகி தீபிகா கிடையாது என்று ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தீபிகா ஏற்கனவே ரஜினி சாருடன் கோச்சடையானில் நடித்துவிட்டார். அதனால் அடுத்த படத்திலும் அதே ஜோடியைப் போட விருப்பமில்லை. படப்பிடிப்பு துவங்கிய பிறகு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் ரவிக்குமார்.

கோச்சடையானில் கத்ரீனா கைப் நடிப்பதாக இருந்தபோது அந்த வாய்ப்பு தீபிகாவுக்கு வந்தது. தற்போது ராணாவில் தீபிகா வாய்ப்பு யாருக்கு போகப் போகிறதோ...

Comments