பிசினஸ் ஓகேன்னா கல்யாணம் காதலனுக்கு திவ்யா திடீர் நிபந்தனை!!!

Tuesday,12th of June 2012
பெங்களூர்::பிசினஸில் வெற்றி பெற்ற பின்தான் காதலனை மணப்பேன் என்று திடீர் நிபந்தனை விதித்தார் திவ்யா. போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வருகிறார் திவ்யா. அவருடன் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்றிருக்கிறார். காதலன் பெயரை பச்சை குத்தி இருக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர் என்று சான்டல்வுட்டில் பரபரப்பு எழுந்தது. இது பற்றி திவ்யா நேற்று கூறியதாவது: இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை. அதற்கான தேதியும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து நான் சினிமாவில் நடிக்க ரபேல் துணையாக உள்ளார். அவரது ஊக்கம், மற்ற லட்சியங்களில் என்னை கவனம் செலுத்த வைத்திருக்கிறது. நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கு முன் ஒரு நிபந்தனையை வகுத்துக் கொண்டிருக்கிறோம். ரபேலும், இருவரும் சமமான தூரத்துடன் விலகி நின்றுதான் உறவை வளர்த்து வருகிறோம். இதற்கு காரணம் ரபேலின் தொழில் முறை திட்டங்கள்தான். அவர் இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டி இருக்கிறது. அதேபோல் நானும் எனது பிசினஸில் வெற்றி பெற வேண்டி இருக்கிறது. இதற்கு இருவருக்குமே அவகாசம் தேவைப்படுகிறது. எங்கள் திருமணத்தை தள்ளிப்போடுவதற்கு இதுமட்டும்தான் காரணம். ரபேலை பொறுத்தவரை அவரது தொழிலில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறார். நாங்கள் இருவரும் நல்ல உறவுடன் இருக்கிறோம். அதை திருமணம் என்ற பெயரில் முடித்துக்கொள்ள விரும்பவில்லை. இவ்வாறு திவ்யா கூறினார்.

Comments