
சென்னை::ரஜினியின் எவர்கிரீன் படமான பாட்ஷாவை இந்தியில் ரீமேக் செய்யும் ஐடியா இல்லை என தெரிவித்துள்ளார் பிரபுதேவா.
பாட்ஷா படத்தை பிரபுதேவா அஜய் தேவ்கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக நீண்ட நாட்களாகப் பேச்சு இருந்தது. பாட்ஷாவை இந்தியில் டப் செய்து வெளியிடும் முயற்சி நடந்ததையடுத்து இந்தப் பேச்சு வலுப்பட்டது. ஆனால் இதனை பிரபுதேவா மறுத்துள்ளார்.
ரவுடி ரத்தோரின் வெற்றிக்குப் பிறகு பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சல்மான்கானை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க இருப்பதாக ஏற்கனவே பிரபுதேவா தெரிவித்திருந்தார். அதற்குமுன் பாட்ஷாவை அஜய் தேவ்கானை வைத்து ரீமேக் செய்ய இருப்பதாக மும்பை ஊடகங்கள் எழுதின. இதனை பிரபுதேவா மறுத்துள்ளார். இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், பாட்ஷாவை ரீமேக் செய்யும் ஐடியா இல்லை என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment