Sunday, 24th of June 2012
பெங்களூர்::அஜீத், நயன்தாரா பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அஜீத் நடிக்கும் புதிய படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதன் ஷூட்டிங் பெங்களூர் கருடா மால் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இத்தகவல் அப்பகுதியில் பரவியது. இதையடுத்து நூற்றுக் கணக்கில் அஜீத் ரசிகர்கள் மண்டபம் முன் திரண்டனர். வளாகத்தின் கேட் மூடப்பட்டிருந்ததால் யாரும் அஜீத்தை பார்க்க முடியவில்லை. நேரம் செல்லச் செல்ல கூட்டம் அலைமோதியது. எல்லோரையும் கலைந்துசெல்லும்படி கூறியும் யாரும் செல்லவில்லை. திடீரென்று சில ரசிகர்கள் கேட் மீதும், காம்பவுண்ட் சுவர் மீதும் ஏறி ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஷூட்டிங்கில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக அருகில் உள்ள ஹலசுரு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரசிகர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.

Comments
Post a Comment