கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Monday, 25th of June 2012
சென்னை::ஜெய், ஹன்சிகா நடிக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ள சந்தானம், இயக்குனரை தேடுகிறாராம்.

ஈ ஒன்றின் பழி நடவடிக்கைகள் நான் ஈ படத்துக்கு அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது. 1,970 ஷாட்களை ஓகே செய்துள்ளார் இயக்குனர் ராஜ்மவுலி.

சாவை கண்டு அஞ்சவில்லை. தயாராகவே இருக்கிறேன். எந்நேரத்தில் இறந்தாலும் அது அமைதியானதாகவும் என்னை சார்ந்தவர்கள் சுயமாக செயல்படுவதாகவும் இருக்க வேண்டும். என் இறப்புக்கு யாரும் வருந்துவது கூடாது என்பது மாஜி நடிகை அமலாவின் ஆசையாம்.

பாண்டிராஜ் அடுத்து இயக்கும் படத்துக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா என பெயரிட்டுள்ளார். தனுஷ், சிவகார்த்திகேயனுடன் டபுள் வில்லன், டபுள் காமெடியன் நடிக்கின்றனர்.

ரேனிகுண்டா, மறுபடியும் ஒரு காதல் படங்களில் குத்தாட்டம் போட்ட சஞ்சனா சிங் இனிமேல் ஹீரோயினாகத்தான் நடிப்பாராம்.

அந்நியன் படத்துக்கு பிறகு விக்ரம், ஷங்கர் இணையும் படத்துக்கு ‘ஐÕ என பெயரிடப்பட்டுள்ளது. சமந்தா ஹீரோயின், ஏ.ஆர்.ரகுமான் இசை. இப்படத்தின் காஸ்டியூமை பிரத்யேகமாக வடிமைக்க ‘மென் இன் பிளாக் ஹாலிவுட் படத்துக்கு காஸ்டியூமராக பணியாற்றிய மாரி வோட் பொறுப்பேற்கிறார்.

கோவாவில் உள்ள வீட்டில் 7 பூனைகள், 3 நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்கிறார் இலியானா. அவைகளுக்கான உணவு வழங்கும் பொறுப்பு சமையல்காரரிடம் கொடுத்திருக்கிறார்.

மும்பையில் வசிக்கும் சுஷ்மிதா சென் ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். ஒவ்வொரு முறை ஐதராபாத் வரும்போதும் தனது பழைய நண்பர்களை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சமீபகாலமாக விழாக்களில் பங்கேற்கும் தமன்னா, பாரம்பரிய கலாசார பாணியில் பட்டு சேலை அணிந்து வருகிறார். இதற்காக காஞ்சிபுரத்துக்கு சென்று பட்டு சேலைகள் வாங்கி இருக்கிறார்.

தனது பிறந்த நாளின்போது பிறந்த 50 குழந்தைகளுக்கு நேற்று தங்க மோதிரம் அணிவித்தார் விஜய்.

தமிழ், தெலுங்கில் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சித்தார்த்-சமந்தா ஜோடியாக நடிக்கின்றனர். கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் நித்யா மேனன்.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்- சமந்தா நடிப்பில் ஹிட்டான ‘பிருந்தாவனம்' படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

கடந்த 2 வருடமாக கோடிக்கணக்கில் செலவழித்து சாலிகிராமத்தில் கட்டிவந்த புது பங்களாவில் சமீபத்தில் குடியேறினார் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

‘காக்க காக்க', ‘வாரணம் ஆயிரம்' படத்துக்கு பிறகு 'துப்பறியும் ஆனந்த்' படத்தில் இணைகின்றனர் கவுதம் வாசுதேவ் மேனன்- சூர்யா.

விக்ரம் நடிக்க தமிழ், இந்தியில் பிஜாய் நம்பியார் இயக்கும் ‘டேவிட்' படத்தில் நடிக்கிறார் ஜீவா.

Comments