Sunday, 24th of June 2012
சென்னை::ஈரோடு கவிதாலயம் சார்பில் இன்று மாலை கொங்கு கலையரங்கில் கலாசார நடனம் நடக்கிறது. இதில் பிரபல சினிமா டைரக்ட்ர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்தி கலந்து கொள்கிறார். அப்போது கல்லூரி மாணவ- மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கிறார்.
இதற்காக ஈரோடு வந்துள்ள அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது-
நான் இதுவரை நினைத்தாலே இனிக்கும். தொட்டால் பூ மலரும், மற்றும் பலர் , ஆட்டநாயகன் ஆகிய 4 படங்களில் நடித்து உள்ளேன். இப்போது ”ஏதோ செய்தாய் என்னை” என்ற படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தில் கதநாயாகியாக லியா என்பவர் அறிமுகமாகிறார். இந்த படம் அடுத்த மாதம் வெளிவருகிறது. இது காதல் மற்றும் ஆக்சன் படம் ஆகும்.
இதுதவிர ‘வேஷம்’ படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் தமிழ்-தெலுங்கில் தயாராகிறது. நல்ல கதையம்சம் உள்ள தரமான படங்களை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறேன்.
எனக்கு கமல் படத்தில் நடிக்க ஆசை. மற்றும் என்னுடன் ஒத்துப்போகும் நடிகர்களுடனும் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயாராக உள்ளேன். எனது அடுத்த படம் கிராமிய சூழல் உள்ள படமாக இருக்கும். மேலும் வித்தியாசமான-மக்கள் விரும்பும் வகையில் உள்ள படங்களில் நடிப்பேன்.
சினிமா தியேட்டர்களில் கூட்டம் குறைந்ததற்கு காரணம் திருட்டு சி.டி. மற்றும் டி.வியில் வரும் சீரியல்கள்தான். இதில் பெண்கள் ஒன்றி போய் விட்டதால் தியேட்டருக்கு வந்துபடம் பார்ப்பது குறைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அபபோது கவிதாலயம் ராமலிங்கம், வீனஸ் மாரிப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments
Post a Comment