தமிழில் விருது படங்கள், மலையாளத்தில் கிளாமர் : இனியா ஷாக்!!!

Thursday,21st of June 2012
சென்னை::தமிழில் விருது படத்தில் நடித்த எனக்கு, மலையாளத்தில் கிளாமர் வேடம் தருகிறார்கள் என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார் இனியா. இது பற்றி அவர் கூறியதாவது: சற்குணம் இயக்கிய வாகை சூட வா படத்தில் கிராமத்து பெண் வேடம் ஏற்று மேக்அப் போடாமல் நடித்தேன். இப்படத்துக்கு விருது கிடைத்தது. இதையடுத்து தங்கர்பச்சான் இயக்கும் ‘அம்மாவின் கைப்பேசி என்ற படத்திலும் நடிப்பை வெளிப்படுத்தும் வேடம் ஏற்றிருக்கிறேன். மலையாளத்தில் ‘பூபடத்தில் இல்லாத ஓரிடம் என்ற படத்தில் கிளாமராக வேடம் ஏற்கிறேன். தமிழ் படம் மற்றும் மலையாள படங்களை ஒப்பிடும்போது இது எனக்கு ஷாக்காக இருக்கிறது. வழக்கமாக மலையாள படங்களில் விருதுக்கான கதைகள் அதிகம் வரும். ஆனால் என் விஷயத்தில் இது உல்டாவாக இருக்கிறது. தமிழில் விருது கதைகளில் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. ஆனால் மலையாளத்தில் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் அதிகமாக கிளாமர் வேடத்தில் நடிக்கவே கேட்கிறார்கள். தமிழில் பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிப்பது அதிர்ஷ்டம். அதேபோல் புதிய தயாரிப்பாளர்கள் படத்திலும் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. இதனால் என்னைப்போன்று புதுமுக நடிகைகளுக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.

Comments