எதிரிக்காக குங்ஃபூ கற்கும் ஸ்ரீகாந்த்!!!

Sunday, 10th of June 2012
பாகன், எதிரி எண் 3 என இரண்டே படங்கள்தான் ஸ்ரீகாந்த் வசம் உள்ளது. இதில் எதிரி எண் 3ஐ அதிகம் நம்புகிறார். காரணம் இதுவொரு க்ரைம் த்ரில்லர்.

கதைப்படி படத்தின் இறுதியில் ஸ்ரீகாந்த் குங்ஃபூ வண்டை போட வேண்டும். ஸ்டண்ட் மாஸ்டரிடம் சொன்னால் ஸ்ரீகாந்துக்கு தெரிந்த வகையில் குங்ஃபூ சண்டை போட வைப்பார் என்றாலும் சண்டை நிஜயமாக தெரிய வேண்டும் என்பதற்காக நிஜமாகவே குங்ஃபூ கற்கிறாராம் ஸ்ரீகாந்த்.

ராம்குமார் இயக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். இவருக்கும் இந்தப் படம்தான் கடைசி ரவுண்ட். இதுவும் அம்பேல் என்றால் நிரந்தரமாக பேக்கப் சொல்ல வேண்டியதுதான்.

மூன்றாவது எதிரியை நம்பிதான் ஸ்ரீகாந்த், பூனம் பஜ்வா மற்றும் இயக்குனர் மூவரும் இருக்கிறார்கள். என்ன ஒரு ஐரணி.

Comments