
சென்னை::மணிரத்னம் 'கடல்' என்ற பெயரில் புது படம் இயக்கி வருகிறார். இதில் நடிகர் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் திடீரென அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டனர்.
கவுதமை விட வயது அதிகம் என்பதால் அவரை நீக்கியதாக தெரிகிறது. சமந்தாவுக்கு பதில் பழைய நடிகை ராதாவின் இரண்டாவது மகள் நாயகியாக தேர்வாகியுள்ளார். அர்ஜுன் வில்லன் வேடத்தில் வருகிறார்.
இப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க நயன்தாராவுக்கு மணிரத்னம் அழைப்பு விடுத்துள்ளார். அதில் நடிப்பதா? வேண்டாமா? என்று நயன்தாரா ஆலோசனை செய்து வருகிறாராம்.
Comments
Post a Comment