Monday, 11th of June 2012
சென்னை::விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஏஎம் ரத்னம் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட புதிய படத்தில் நடிக்கும் அஜீத்தின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு பெருத்த ஆர்வம்...
இதோ... இங்கே வெளியாகியிருப்பது போலத்தான் அவரது தோற்றம் இருக்குமாம்!
நரைத்த தலை, பெருமளவு வெளுத்த தாடி, சோடாபுட்டி கண்ணாடி... இதுதான் 'தல'யின் புதிய தோற்றம்.
ரஜினிக்குப் பின் தன் புறத்தோற்றம் பற்றி கவலையே இல்லாத நடிகர் என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படிமேலே போய்விட்டார் அஜீத். தான் நிஜத்தில் எப்படி இருக்கிறோமோ அதையே திரையிலும் காட்ட அவர் முயற்சிக்கிறார் இந்தப் படத்தில்.
ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அதே நேரம், சாதாரண ரசிகனின் மனநிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு சினிமாவுக்கே உரிய இன்னொரு கெட்டப்பும் இருக்கும் என்கிறார்கள்.
ஆனாலும் இப்போது படப்பிடிப்பில் இந்த சோடாபுட்டி கண்ணாடி தோற்றத்தில் உள்ள அஜீத்தைத்தான் பார்க்க முடிகிறது!

Comments
Post a Comment