வில்லன் வேடத்தில் நடிக்க தயக்கம் இல்லை: விவேக்!!!

Saturday, 23rd of June 2012
சென்னை::வில்லன் வேடத்தில் நடிப்பதற்கு தயக்கம் இல்லை என்றார் விவேக். இதுபற்றி அவர் கூறியதாவது: காமெடி வேடங்களிலேயே என்னை ர்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு ‘வழிப்போக்கன்’ என்ற படம் ஒரு ‘ஷாக்’காக இருக்கும். தமிழ், கன்னடம் இருமொழிகளில் இப்படம் உருவாகிறது. இதில் வில்லன் வேடம் ஏற்பது வித்தியாசம். வழக்கமான வில்லன்கள் இந்த வேடத்துக்கு பொருந்தமாட்டார்கள் என்பதால் என்னை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். த்ரில்லர் படமான இதில் ஆரம்பம் முதல் எனது கேரக்டர் நெகடிவ் குணம் கொண்டது என்பது தெரியாது. பிளாஷ்பேக்கில்தான் இந்த விஷயம் வெளிப்படும். ‘வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன்?’ என்கிறார்கள். வில்லன் வேடத்தில் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. காமெடி, வில்லத்தனம் எல்லாமே நடிப்பு என்ற கோணத்திலேயே அணுகுகிறேன். சுந்தர்.சியுடன் முரட்டுக்காளை படத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறேன். இந்த வேடமும் ஒரு வகையில் சஸ்பென்ஸ் அம்சம் கொண்டது. திருநங்கையாக நடிப்பதற்கு முன் பல்வேறு ஆய்வுகளை செய்தேன். அதன்பிறகுதான் நடித்தேன். தொடர்ந்து ஹரி இயக்கும் ‘சிங்கம் 2’, வி.சேகர் இயக்கும் ‘சரவணப் பொய்கை’, ‘மச்சான்’, ‘பத்தாயிரம் கோடி’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறேன். இவ்வாறு விவேக் கூறினார்.

Comments