Saturday, 16th of June 2012
சென்னை::நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீ தேவி நடித்துள்ள ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரோமோவிற்காக இங்கிலீசை தப்பும் தவறுமாக பேசி நடித்துள்ளாராம் ஸ்ரீதேவி.
போனிகபூருடன் திருமணம், குழந்தைகள் என சினிமாவிற்கு குட்பை சொன்ன நடிகை ஸ்ரீ தேவி 14 வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்'. இயக்குநர் பால்கி தயாரிக்கும் இந்த திரைப்படத்தினை அவரது மனைவி கவுரி ஷிண்டே இயக்குகிறார் இந்த திரைப்படத்தில் கதைப்படி ஸ்ரீதேவி நடுத்தர குடும்பத் தலைவியாக வருகிறார்.
அரைகுறை ஆங்கிலம் தெரிந்தவர் போல் முதலில் நடிக்க வேண்டும். பின்னர் சந்தர்ப்ப சூழல் காரணமாக அமெரிக்கா சென்று அங்கு மொழிப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார். அவருக்கு ஆங்கிலம் சரியாக தெரியாததால் அங்குள்ளவர்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள்.
இதையே சவாலாக ஏற்றுக்கொண்டு நாளடைவில் ஆங்கிலத்தை முறைப்படி கற்றுக்கொள்கிறார். பின்னர் ஆங்கிலம் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
இதற்காக பயிற்சியாளர் ஒருவரிடம் அமெரிக்க ஆங்கிலத்தை முறைப்படியாக கற்றாராம் ஸ்ரீதேவி.
இந்த திரைப்படம் செப்டம்பரில் ரீலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் விளம்பர காட்சிக்காக அரைகுறையாக ஆங்கிலத்தில் பேசி நடித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினாராம் ஸ்ரீ தேவி.

Comments
Post a Comment