நமீதாவுக்கு அதிவேக பைக்குகளில் ஊர் சுற்றுவது என்றால் மிகவும் பிடிக்குமாம்!!!

Sunday, 24th of June 2012
சென்னை::நமீதாவுக்கு அதிவேக பைக்குகளில் ஊர் சுற்றுவது என்றால் மிகவும் பிடிக்குமாம்.

வழக்கமாக ஆண்கள் தான் அதிவேக பைக்குகளில் ஊர் சுற்றுவார்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக நமீதா அப்படி ஊர் சுற்றுகிறார். நமீதா கையில் அவ்வளவாக படங்கள் இல்லை. ஆனாலும் அம்மணி கடை திறப்பு விழா, வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கை நிறைய பணம் சம்பாதிக்கிறார். நமீதாவின் பொது சேவையை நம்மாட்கள் கண்டு கொள்ளாவிட்டாலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் அவரைப் புகழந்து தள்ளுகிறார்கள். நமீதா போல வருமா என்கிறார்கள்.

இந்நிலையில் நமீதா பற்றி இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது நமீதா ஷூட்டிங் இல்லாத நேரங்களி்ல் சூரத் மற்றும் ஹம்பிவேலியில் அதிவேக பைக்கில் பறக்கிறாராம். நமீதாக்குள் இப்படி ஒரு வீரியா என்று ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

நீங்கள் சூரத் அல்லது ஹம்பிவேலியில் இருக்கிறீர்களா? பார்த்து, ரோட்டில் பைக்கில் யாராவது பறந்தால் அது நமீதாவாக கூட இருக்கலாம்.

Comments