
சென்னை:ஸ்ரீதேவி, தர்மேந்திரா நடித்த ஹிம்மத்வாலா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். அஜய் தேவ்கான் ஹீரோவாக நடிக்கும் இந்த ரீமேக்கில் நடிக்க தமன்னாவுக்கும், அனுஷ்காவுக்கும் நடுவில் கடும் போட்டி. கடைசியில் வென்றவர்...
சந்தேகமில்லாமல் தமன்னாதான்.
தென்னிந்தியாவில் உருவாகும் படங்களை மட்டுமின்றி இங்குள்ள நடிகைகளையும் தங்கள் படத்தில் பயன்படுத்த இந்தி ஹீரோக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அஜய் தேவ்கான் நடித்த சிங்கம் ரீமேக்கில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்தார். இப்போது தமன்னா.
ஆக்சன் படமான ஹிம்மத்வாலா ஸ்ரீதேவிக்கு இந்தியில் நிலையான ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது. தமன்னாவுக்கு...?
பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments
Post a Comment