Sunday, 17th of June 2012
சென்னை::நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கணேஷ் வெங்கட்ராமன், தனது அடுத்தப் படமாக தேர்ந்தெடுத்திருப்பது 'சந்திரா' என்ற திரைப்படத்தை. தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமனுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.
ஏற்கனவே 'அபியும் நானும்' மூலம் திரிஷாவுடனும், 'தமருக்கும்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அனுஷ்காவுடனும் டூயட் பாடிய கணேஷ், 'சந்திரா' படத்தின் மூலம் ஸ்ரேயாவுடனும் டூயட் பாடப்போகிறார்.
கடைசி தலைமுறை ராஜவம்சத்தை சேர்ந்த ராணியின் வாழ்க்கையும், அவரை காதலிக்கும் இரண்டு ஹீரோக்களைப் பற்றியும் தான் இப்படத்தின் கதை. இதில் ராணியாக ஸ்ரேயாவும், இரண்டு ஹீரோக்களில் ஒருவர் கன்னட முன்னணி ஹீரோ பிரேம் நடிக்க, மற்றொரு ஹீரோவாக கணேஷ் நடிக்கிறார்.
இதில் கணேஷ் வெங்கட்ராமன், அமெரிக்கா ரிட்டன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக இப்படத்தின் இயக்குநர் ரூபா அய்யர், பல மாதங்களாக நடிகர்களை தேடினார்களாம். இறுதியில் கணேஷைப் பார்த்தவுடன் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் இவர் தான் என்று முடிவெடுத்தார்களாம்.
அமெரிக்காவில் படமாகவுள்ள இப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் கணேஷ் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணேஷ் வெங்கட்ராமன், நடித்திருக்கும் 'பனித்துளி' தமிழ்ப் படம் ஜூலை மாதத்திலும், 'தமருக்கும்' என்ற தெலுங்குப் படம் ஆகஸ்ட்டிலும் வெளியாகிறது.

Comments
Post a Comment