Wednesday,20th of June 2012
சென்னை::மீண்டும் நடிக்க வருகிறார் குட்டி ராதிகா. ‘இயற்கை’ படத்தில் நடித்தவர் குட்டி ராதிகா. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்து வாழ்க்கையில் செட்டிலானார். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: திருமணத்துக்கு பிறகு நடிக்க வரக்கூடாது என்ற முடிவுடன் இருந்த எனக்கு ரசிகர்கள் தந்த ஊக்கம்தான் மீண்டும் நடிக்க தூண்டியது. மனைவி, ஒரு குழந்தைக்கு தாய் என்பதை மனதில் வைத்து அதற்கு ஏற்ற வேடங்களில்தான் நடிப்பேன். இதற்காக காதல் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அர்த்தமில்லை. டூயட் காட்சிகளில் நடித்தாலும் ஹீரோவை தொடாமல்தான் நடிப்பேன். குத்தாட்ட பாடல்களில் ஆட வாய்ப்பு வந்தால் ஆடுவேன். இப்போதைக்கு 3 படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் கேட்டிருக்கின்றனர். மேலும் சொந்த படம் தயாரிக்கும் பணியும் நடக்கிறது. அதிலும் நடிப்பேன். எனக்கு 25 வயதுதான் ஆகிறது. கமர்ஷியல் படங்களில்தான் கவனம் செலுத்துவேன். விருதுக்கான படங்களில் நடிப்பதுபற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை. அதுபோன்ற படங்களில் நடிக்க இன்னும் காலம் இருக்கிறது. ஹீரோக்களுக்கு சமமான பாத்திரங்களில்தான் நடிப்பேன். மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு என் கணவர் குமாரசாமியிடம் அனுமதி வாங்கிவிட்டேன். அவரும் ஒரு தயாரிப்பாளர்தான். சினிமாவை பற்றி அவருக்கு நன்கு தெரியும். இவ்வாறு குட்டி ராதிகா கூறினார்.

Comments
Post a Comment