ஷாருக்கான் அணிக்கு சப்போர்ட் செய்தது தப்பா? ஜெனிலியா!!!

Saturday, June, 02, 2012
டி20 கிரிக்கெட் போட்டியில் ஷாருக்கான் அணிக்கு சப்போர்ட் செய்தது தப்பில்லை. இதற்கு உள்நோக்கம் கற்பிக்காதீர்கள் என்றார் ஜெனிலியா.
சமீபத்தில் சென்னையில் நடந்த டி20 இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியை காண சென்ற த்ரிஷா மும்பை நட்சத்திரங்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்று அமர்ந்து போட்டியை ரசித்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் கோலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து பிரபலமான ஜெனிலியா, ஷாருக்கான் அணியை கைதட்டி உற்சாகப்படுத்தினார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.

இதுகுறித்து ஜெனிலியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: இதையொரு பிரச்னையாக்காதீர்கள். டி20 நட்சத்திர போட்டியை காண என் கணவர் ரிதேஷுடன் சென்னை வந்தேன். ஷாருக்கான்தான் எங்களையும் சக நண்பர்களையும் அழைத்து வந்தார். ஷாருக்கான் எங்கள் இருவருக்கும் நெருங்கிய நண்பர். அதனால் அவர்களுடன் அமர்ந்திருந்தேன். இதுவொரு விளையாட்டுத்தான். அந்த கண்ணோட்டத்துடன்தான் இதைப் பார்க்க வேண்டும். சென்னை மற்றும் கொல்கத்தா இரு அணியினருமே நன்றாக விளையாடினார்கள்.

அந்த மாலைப்பொழுதை மிகவும் ரசித்தேன். போட்டி நடந்துக்கொண்டிருக்கும்போதே கோலிவுட்டை சேர்ந்த பலர் என்னிடம் பேசினார்கள். அப்போதுதான் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நான் நடித்திருந்த ‘உருமி’ ரிலீஸ் ஆகி இருந்தது. அதற்கு வாழ்த்து சொன்னார்கள். திரையுலகுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருந்தேன். திருமணத்துக்கு பிறகு ஓய்வு தேவைப்பட்டது. அதை அனுபவிக்கிறேன். இன்னும் சிலநாட்களுக்கு பிறகு மீண்டும் நல்ல கதை அம்சமுள்ள படங்களில் நடிப்பேன். இவ்வாறு ஜெனிலியா கூறினார்.

Comments