பிரபல இயக்குனர்களின் படங்களிலிருந்து விலகும் நடிகை சமந்தா!!!

Saturday, 30th of June 2012
சென்னை::பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்தார். பின்னார் அவர் அப்படத்திலிருந்து விலகினார். இதனால் 'கடல்' படத்தில் முன்னாள் கதாநாயகி ராதாவின் இளைய மகள் துளசி நடிக்க இருக்கிறார்.

மணிரத்னத்தின் படத்திலிருந்து சமந்தா விலகினாலும், சங்கர் இயக்க இருக்கும் 'ஐ' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கடைசியாக கிடைத்த தகவலின்படி இப்படத்திலிருந்தும் சமந்தா விலகிவிட்டாராம்.

இப்படி பிரபல இயக்குனர்களின் படங்களில் இருந்து வளரும் நடிகையான சமந்தா விலகுவதற்கு அவருக்கு வந்துள்ள ஒரு சரும நோய்தான் காரணமாம். இதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாராம்.

சமந்தாவின் சரும சிகிச்சை மருத்துவர், 3 மாத காலத்திற்கு சூரிய வெளிச்சத்திலோ, படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் பெரிய விளக்குகள் அருகிலோ நிற்க கூடாது என்று தெரிவித்து இருக்கிறாராம். இதனாலேயே பிரபலங்களின் படங்களிலிருந்து சமந்தா விலகியுள்ளாராம்.

Comments