Monday, 18th of June 2012
சென்னை::திருமண சர்ச்சைக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தும் அனன்யா, 3 கிளைமாக்ஸ் கொண்ட படத்தில் நடிக்கிறார். நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்தவர் அனன்யா. இவருக்கும் தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியானதால் அனன்யா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். ஆனால் அவரை மணப்பதில் பிடிவாதமாக இருக்கிறார் அனன்யா. இதையடுத்து திருமண தேதி முடிவாவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த பிரச்னையால் படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்து வந்தார்.
இதற்கிடையில் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் அனன்யா. மலையாளத்தில் ரத்தா ராக்ஷா என்ற 3 டி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். பேஷன் டிசைனராக ஒரு வேடம். மோகினியாக மற்றொரு வேடம். 8 நாட்கள் தொடர்ந்து மாறி மாறி இருவேடங்களிலும் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உடன் நடிக்கும் சன்னி வனேயை பேய் வேடம் போட்டு பயமுறுத்த எண்ணினேன். முதல் நாள் ஷூட்டிங்கில் அந்த சம்பவம் நடந்தது. அதுவரை நான் பேய் கெட்டப் போட்டு சன்னி பார்க்கவில்லை. எனவே அவருக்கு ஷாக் கொடுக்க எண்ணினேன்.
இரவில் அவர் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது விளக்குகள் அணைந்திருந்தது. மொபைல் போனில் என் கண்களுக்கு மட்டும் வெளிச்சம் காட்டி அவரை குரல் மாற்றி அழைத்தேன். அவர் மெதுவாக கண்விழித்துப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து அலறியபடி கட்டிலிலிருந்து கீழே விழுந்தார். இப்படத்துக்கு 3 விதமான கிளைமாக்ஸ் படமாக்கப்படுகிறது. இவ்வாறு அனன்யா கூறினார்.

Comments
Post a Comment