அப்போ குடுமிப்பிடி - இப்போ கட்டிப்பிடி! முடிவுக்கு வந்த கவர்ச்சி சண்டை!!!

Saturday, 9th of June 2012
போட்டியிலும் பொறாமையிலும் நடிகைகள் ஒருவருக்கொருவர் சண்டை போட்ட நிலை மாறி பப்ளிசிட்டிக்காக வேண்டுமென்றே வார்த்தைகளால் அடித்துக்கொள்ளும் நிலை தான் தற்போதைய திரையுலகின் நிலை.

தனது கவர்ச்சியான நடிப்பினால் குறுகிய காலத்தில் பல ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர் நடிகை நமீதா. நமீதாவின் ஆடை குறைந்தாலும் படங்களும், மார்க்கெட்டும் வளர்ந்து கொண்டே சென்றன. நடிகை சோனாவும் கவர்ச்சியாக நடித்துக்கொண்டிருந்தார் என்றாலும், சோனாவை விட நமீதாவிற்கே மார்கெட்டும் ரசிகர்களும் அதிகமாக இருந்தனர்.

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சோனா திரையுலக நண்பர்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் பார்ட்டி கொடுத்துள்ளார். சிம்பு, ஜெய், சோனியா அகர்வால் என பல திரையுலக நட்சத்திரங்கள் அதில் கலந்து கொண்டனர். அந்த பார்ட்டியில் நமீதாவும் கலந்து கொண்டது தான் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சோனா கே.வி. ஆனந்த இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’ படத்தில் நமீதாவாக நடித்திருந்தார். இதனால் கோபமடைந்த நமீதா, சோனாவை பார்க்கும் இடத்தில் எல்லாம் முகத்தில் அடித்தார் போல் பேசாமல் செல்வதும், சோனாவின் ஃபோனுக்கும், எஸ்.எம்.எஸ்-க்கும் செவி சாய்க்காமலும் இருந்தார். நமீதாவின் செயல்களால் கோபமடைந்த சோனா ’நமீதாவுக்கு திமிர் அதிகம்’ என்று பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியில் சோனா “ நமீதா அவ்வளவு பெரிய நடிகைக்கு உள்ள மனப்பக்குவத்தில் இல்லை. என் ஃபோனுக்கும், எஸ்.எம்.எஸ்-க்கும் பதிலளிக்க மறுக்கிறார். அவர் திமிர் பிடித்த நடிகை” என பொரிந்து தள்ளினார். சோனா பேசியதை பற்றி கருத்து கேட்ட போது “சோனாவா அது யார்? யாரென்றே தெரியாத ஒருவர் என்னை பற்றி பேசுவதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்.

நான் இந்த ஆண்டில் மட்டும் 6 படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அவரோ ஒரு படம் தான் நடித்துள்ளார். என்னுடன் பேசுவதற்குக் கூட தகுதியற்ற ஒரு பெண்ணின் எஸ்.எம்.எஸ்-க்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்” எனக் நமீதா கூறினார்.

ஆனால் இப்போது நமீதா சோனாவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கலக்கலாக வந்து கலக்கி இருக்கிறார்.

அப்போது குடுமிப்பியாக சண்டைப்போட்ட கவர்ச்சி நடிகைகள் இப்போது கட்டிப்பிடித்து போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

Comments