
சென்னை::நயன்தாராவை அடியோடு மறந்துவிட்டேன். இனி அவரைப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என பிரபு தேவா கூறியுள்ளார்.
தீவிரமான காதலில் இருந்த நயன்தாரா, பிரபுதேவா இப்போது பிரிந்துவிட்டனர்.
திருமணத்துக்கு தயாரான நிலையில் காதலை இருவரும் துண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா சினிமாவுக்கு முழுக்குப் போட்டு, இந்து மதத்துக்கும் மாறினார்.
பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
மேலும் பிரபுதேவா தன் காதலுக்கு தகுதியில்லாதவர் என்றெல்லாம் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பிரபுதேவா இப்போது பதிலளித்துள்ளார் (புதுப்புது அர்த்தங்கள் ரேஞ்சுக்கு போயிடுவாங்க போலிருக்கே!)
பிரபு தேவாவிடம், 'நயன்தாராவுடன் உங்களுக்கு என்ன பிரச்சினை. காதலை ஏன் முறித்துக் கொண்டீர்கள்?' என்று கேட்டதற்கு,
இத்தனை நாள் பேசக்கூடாது என்று இருந்தேன். இப்போது இந்த கேள்விக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். ஆனால் ஏதோ ஒன்று பேச விடாமல் தடுக்கிறது. எனவே இந்த விஷயம் பற்றி பேச விரும்பவில்லை. அவரைப் பத்தி கேக்காதீங்க. அது முடிந்து போன விஷயம். இப்போது எதையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. அதை மறந்து விட்டு மேலே போய்க் கொண்டே இருக்கிறேன். அதுதான் என் பாலிசி.
நயன்தாரா தனது நேர்மைக்கும் விசுவாசத்துக்கும் மதிப்பில்லாமல் போனதால் விலகியதாக வருத்தப்பட்டுள்ளாரே?'
நயன்தாரா வெளிப்படையாக பேசுவது அவரது விருப்பம். அதற்கொல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. அவர் சொல்வதெல்லாம் என்னை பாதிக்காது. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என்னை பொறுத்தவரை கடவுள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கிறது. அவர் என்னை நல்ல பாதையில் வழி நடத்துவார்..", என்றார்.
அடுத்தடுத்த படங்கள் குறித்து...'
தங்கர்பச்சான் இயக்கத்தில் நான் நடித்த "களவாடிய பொழுதுகள்" அழகான காதல் கதை. அந்த படம் எப்போது வரும் என்று காத்திருக்கிறேன். இந்தியில் எனது படங்கள் நன்றாக போகிறது. தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் வருவேன்.
சல்மான்கானுடன் மீண்டும் படம் பண்ண யோசனை இருக்கிறது. ரஜினியின் பாட்ஷா படத்தை அக்ஷயகுமாரை வைத்து ரீமேக் செய்யப் போவதாக வெளியான செய்தி உண்மையல்ல," என்றார்.
Comments
Post a Comment