நடிகர் அஜித் படப்பிடிப்பில் ரசிகர்கள் ரகளை : சென்னை திரும்பினர் படக்குழுவினர்!!!

Tuesday, 26th of June 2012
பெங்களூரு::நடிகர் அஜித், நயன்தாரா படப்பிடிப்பில், ரசிகர்களின் ரகளையால், பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பு, பாதியில் நிறுத்தப்பட்டது. படக்குழுவினர் சென்னை சென்றனர். இந்தி படமான, "ரேஸ்' ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில், தமிழில் தயாராகி வருகிறது. இதில், நடிகர் அஜித், நயன்தாரா நடிக்கின்றனர். விஷ்ணுவர்தன் டைரக்ஷன் செய்து வருகிறார். படத்துக்கு, இன்னமும் பெயரிடப்படவில்லை. கைகலப்பு பெங்களூருவில், பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, கடந்த 18ம் தேதியிலிருந்து, படக்குழுவினர் பெங்களூவில் முகாமிட்டனர். பெங்களூரு கருடா மால் அருகே, ஒரு வீட்டில் படப்பிடிப்பு துவங்கியது. அஜித், நயன்தாரா வந்த தகவல் பரவியது. இதனால், அவர்களை பார்க்க ரசிகர்கள் கூடினர். படப்பிடிப்பு நடந்த வீட்டுக்குள், ரசிகர்கள் செல்ல முற்பட்டனர். இதனால், செக்யூரிட்டிகளுக்கும், ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த இரண்டு கார் கண்ணாடிகளை, ரசிகர்கள் அடித்து நொறுக்கினர். இடம் மாற்றம் படப்பிடிப்பு முடிந்து, தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற போது, அஜித்தின் காருக்கு, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதனால், மறு நாள் லொக்கேஷன், பெங்களூரு வெளிப்பகுதியான ஹெண்ணூருக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள பழமை வாய்ந்த சர்ச்சில், படப்பிடிப்பு ஆரம்பமானது. அங்கும், ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது. அஜித்தை பார்க்க விடாத போலீசாருடன், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்து தவிர்ப்பு நேற்று முன்தினம், படப்பிடிப்பு முடிந்த அஜித், காரில் வரும் போது, அவரை பார்க்க வேண்டுமென, அவரது ரசிகர்கள் இருவர், பைக்கில் துரத்தி வந்தனர். ரிங்ரோட்டில் வரும் போது, அஜித்தின் காரை, "ஓவர் டேக்' செய்து, அவரை பார்க்க முற்பட்ட ரசிகர்கள், நிலை தடுமாறி, அஜித் கார் முன், பைக்குடன் விழுந்தனர். அஜித் கார், உடனடியாக பிரேக் போட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், கோபமடைந்த அஜித், பெங்களூருவில் படப்பிடிப்பு வேண்டாம். வேறு இடம் பார்த்து கூறுங்கள்; வருகிறேன் என கூறி, சென்னை சென்று விட்டார். இதை தொடர்ந்து, பல நாள் திட்டமிட்டு வந்த படக்குழுவினரும், பெங்களூருவை காலி செய்து விட்டு, சென்னை சென்றனர்.

Comments