மாமியாராகிறார் மாஜி 'கனவுக் கன்னி' ஹேமமாலினி!!!

Tuesday,12th of June 2012
சென்னை:ஹேமமாலினியின் மகள் இஷா தியோல், தனது காதலரான பரத் தக்தனி என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் திருமணம் ஜூலை 29 ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் ஹேமாமாலினி -தர்மேந்திரா தம்பதியர்.

ஹேமாமாலியின் மகள் இஷா தியோல் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தமிழில் மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இஷா தியோல் மும்பை தொழிலதிபர் பரத் தக்தனியை காதலிப்பதை அறிந்த தர்மேந்திரா - ஹேமாமாலினி தம்பதியர் இவர்களின் காதலுக்கு, தற்போது பச்சை கொடி காட்டியுள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் (12-02-12) அன்று மும்பையிலுள்ள ஹேமமாலினியின் இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது.

இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இவர்களுடன் பாலிவுட் பிரபலமான ஜெயா பச்சனும் கலந்து கொண்டார்.

இவர்களின் திருமணம் ஜூலை 29 ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. திருமண நாள் நெருங்குவதால் தர்மேந்திரா - ஹேமமாலினி தம்பதியர் பரபரப்பாக உள்ளனராம். இந்த திருமணத்தில் பிரபல அரசியல்வாதிகளும், பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகளை விரும்பும் மருமகன் கிடைத்துள்ளதால் மாமியாராகப்போகும் ஹேமமாலினி மகிழ்ச்சியில் திளைக்கின்றாராம்.

Comments