Friday, ,June, 08, 2012
போர்ச்சுகல் நாட்டு காதலரை மணக்க முடிவு செய்திருக்கிறார் திவ்யா. ‘வாரணம் ஆயிரம்’, ‘குத்து’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் திவ்யா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கும் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரபேலுக்கும் காதல் மலர்ந்தது. தனது காதல் பற்றி ஏற்கனவே இணையதளத்தில் திவ்யா அறிவித்திருந்தார். சமீபத்தில் இவர் நடித்த ‘சஞ்சு வெட்ஸ் கீதா’ என்ற கன்னட படத்தின் 100வது நாள் விழாவில் ரபேல் பங்கேற்றார். பெங்களூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காதலனுடன் ஜோடியாக அமர்ந்து ரசித்தார் திவ்யா.
ரபேல் குடும்பம் போர்ச்சுகல் நாட்டில் வசிக்கின்றது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தனது மின்சாதன வர்த்தகத்தை விரிவாக நடத்தி வருகிறார். வருடக்கணக்கில் காதல் பறவைகளாக வலம் வந்துகொண்டிருக்கும் ரபேல்-திவ்யா விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். கன்னடத்தில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் ஒரே நடிகை என்பதுடன், அங்கு நம்பர் ஒன் நடிகை என்ற பெயரை பெற்றிருக்கும் திவ்யா, தன்னை தேடி வரும் படங்களை ஒப்புக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் திவ்யா ரூ.54 லட்சம் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. கன்னடத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் தங்கள் திருமண தேதியை முடிவு செய்வது குறித்து ரபேல், திவ்யா பேசி வருகின்றனர்.

Comments
Post a Comment