Sunday, 10th of June 2012
`உருமி' படத்தை மலையாளத்தில் தயாரித்தவர், நடிகர் பிருதிவிராஜ். இது, அவருடைய முதல் தயாரிப்பு. சொந்தமாக படம் தயாரித்தது ஏன்? என்பது பற்றி பிருதிவிராஜ் கூறியதாவது:-
வாஸ்கோடகாமா பற்றி படம் எடுக்கப் போகிறேன் என்று சந்தோஷ் சிவன் என்னிடம் கூறியதும், அந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்றேன். சந்தோஷ் சிவன் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார். நான் அவரிடம் வாக்கு கொடுத்ததில் இருந்து பின்வாங்கவில்லை. என் அத்தனை வருட உழைப்பின் மூலம் கிடைத்த சேமிப்பை படத்துக்கு செலவு செய்தேன்.
எனக்கு நம்பிக்கை இருந்தது. படம் வெற்றி பெறும் என்று. எதிர்பார்த்தது போலவே தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் `உருமி' வெற்றி பெற்றுள்ளது.
இந்த படத்துக்கு நான்தான் தயாரிப்பாளர் என்பதால் பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், நித்யா மேனன் ஆகியோர் தங்கள் சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொண்டார்கள்.
படத்தின் முக்கியத்துவம் சிதைந்து விடாமல் தமிழில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வெளியிட்டிருப்பது போல் இந்தியில் யாராவது முன் வந்தால், நிச்சயம் இந்தியிலும் `உருமி' வெளியாகும்''.

Comments
Post a Comment