புதுத் தெம்பில் சோனி!!!

Friday, 15th of June 2012
சென்னை::இசை உலகில் தற்போது 'நீதானே என் பொன்வசந்தம்' பாடல்கள் வெளியீடு எப்போது என்பது தான் ஹாட் டாபிக்.

முதன் முறையாக் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இசைக்காக இளையராஜாவோடு இசைந்திருக்கிறார் இயக்குனர் கெளதம் மேனன்.

இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. பல்வேறு நிறுவனங்கள் முண்டியடித்தன. ஆனால் சோனி நிறுவனம் இப்போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்நிறுவனம் தான் கெளதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளிவந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இசையையும் வெளியிட்டது.

'நீதானே என் பொன்வசந்தம்' இசையை பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது சோனி. அதுவும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினை இசைக்கு கொடுத்த விலையை விட அதிகமாம். 'விண்ணைத்தாண்டி வருவாயா' வைப் போலவே இதுவும் வெற்றி பெறும் என தெம்புடன் இருக்கிறதாம் சோனி.

ஜுலை முதல் வாரத்தில் இப்படத்தின் இசை வெளியீடு இருக்கும் என்று அறிவித்து இருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

'கொசுறு' கபாலி : " இளையராஜாவைப் பார்த்து கௌதம் மேனன் 'நீதானே என் பொன்வசந்தம்.. புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்'னு பாடுவாரோ?!

Comments