சச்சின் ஜோஷியுடன் என்ன செய்கிறாய்?’ விமலா ராமனுக்கு பிரியாமணி எஸ்எம்எஸ்!!!

Sunday, 10th of June 2012
பாலிவுட் நடிகர் சச்சினுடன் என்ன செய்கிறாய்’ என்று விமலா ராமனுக்கு பிரியாமணி அனுப்பிய எஸ்எம்எஸ் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது பிரியாமணியிடம் பாலிவுட் நடிகர் சச்சின் ஜோஷி சில்மிஷம் செய்ததாகவும், அதற்கு பிரியாமணி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பரபரப்பான தகவல் வெளியானது. ஆனால் உண்மையில் இருவரும் நெருக்கமான நட்புடன் பழகி வருகிறார்கள் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த ‘மும்பை மிர்ரர்’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங்கில் சச்சினுடன் விமலா ராமன் பங்கேற்றிருந்தார். பின்னர் இருவரும் இரவு விருந்துக்கு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். காரசாரமான உணவை ஆர்டர் செய்து ருசித்துக்கொண்டிருந்தனர். அப்போது விமலா ராமன் செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அது பிரியாமணி அனுப்பியது. ‘ ‘ஹாய் எப்படி இருக்கிறாய், எங்கு இருக்கிறாய்’ என்று கேட்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்த விமலா,‘மும்பையில் ஷூட்டிங்கில் இருக்கிறேன்’ என்று பதில் அளித்தார். உடனே மற்றொரு எஸ்எம்எஸ்,‘சச்சினுடன் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்’ என்ற கேள்வியுடன் வந்தது. அதைப்பார்த்து சச்சின், விமலா இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் இருவரும் விருந்துக்கு வந்த விஷயம் யாருக்கும் தெரியாது. பிரியாமணிக்கு இந்த விஷயம் எப்படி தெரிந்தது என்று குழம்பினர். பிரியாமணியின் எஸ்எம்எஸுக்கு விமலா ராமன் பதில் அனுப்பாமல் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி விமலா ராமனிடம் கேட்டபோது, ‘‘பிரியாமணியும், நானும் இணைந்து படங்களில் நடித்திருக்கிறோம். அவரை எனக்கு நன்றாக தெரியும். சச்சினுடன் நடித்துக்கொண்டிருந்தபோது அவர் எனக்கு எந்த எஸ்எம்எஸும் அனுப்பவில்லை. இது தவறான தகவல்’’ என்றார்.

Comments