ஸ்டன்ட் கிளாசுக்கு செல்லாமல் டிமிக்கி : பட வாய்ப்பை இழந்தார் திவ்யா!!!

Friday, ,June, ,01, 2012
இயக்குனர் ஏற்பாடு செய்த ஸ்டன்ட் பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் இழுத்தடித்த திவ்யா, பட வாய்ப்பை இழந்தார். தமிழ், கன்னடத்தில் உருவாகும் படம் Ôசந்திராÕ. ரூபா அய்யர் இயக்குகிறார். இதில் நடிக்க திவ்யா ஒப்பந்தமாகியிருந்தார். படத்தில் கதைப்படி ஹீரோயினுக்கு ஆக்ஷன் காட்சிகளும் உண்டு. இதற்காக ஸ்டன்ட் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 2 மாதங்கள் இந்த வகுப்புக்கு போக வேண்டும் என திவ்யாவிடம் ஆரம்பத்திலேயே கூறியிருந்தார் ரூபா. இதைக் கேட்டு திவ்யாவும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் சொன்னபடி அவர் சரியாக வகுப்புக்கு செல்லவில்லை. ஓரிருமுறை வகுப்புக்கு சென்றவர், சரியாக பயிற்சி பெறாமல் செல்போனில் பேசியபடி நேரம் கழித்துள்ளார். இரு மாதங்கள் இப்படியே கழிந்துள்ளது. Ôபயிற்சியாளருக்கு சம்பளம் மட்டும் சரியாக கொடுத்துவிட்டோம். ஆனால் அது பற்றியெல்லாம் திவ்யா கவலைப்படவில்லை. அவருக்கு இந்த பயிற்சியில் சிறிதும் ஆர்வம் இல்லைÕ என பட வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் நொந்துபோன ரூபா, படத்திலிருந்து திவ்யாவை நீக்கிவிட¢டார். இது பற்றி அவர் கூறுகையில், ÔÔதிவ்யா நல்ல தோழி. தவறான புரிதலால் ஏதோ பிரச்னை ஏற்பட்டது. அதனால் நினைத்தபடி எல்லாம் நடக்கவில்லை. அந்த கதையை இப்போது பேசி பயனில்லை. அப்படி பேசினால், அது கன்னட சினிமாவில் பிரச்னையை கிளப்புவதாக இருக்கும். இப்போது இதில் ஸ்ரேயா நடிக்க உள்ளார். அவர் நல்ல நடிகைÕÕ என்றார்.
திவ்யாவின் தரப்பில் கூறும்போது, ÔÔசில காரணங்களால் Ôசந்திராÕ படத்தில் திவ்யா நடிக்கவில்லை. அவர் பெயரை பயன்படுத்தி, படத்துக்கு விளம்பரம் தேடுவதை நிறுத்த வேண்டும்ÕÕ என்றார்.

Comments