விவாகரத்து வழக்கு: மனோஜ் கே. ஜெயனிடம் மகளை ஒப்படைத்தார் ஊர்வசி!!!

Wednesday,13th of June 2012
திருவனந்தபுரம்::தமிழ் திரை உலகில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஊர்வசி. தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கன்னடம், மலையாளம் உள்பட ஏராளமான படங்களிலும் நடித்தார். இந்நிலையில் மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இதனிடையே இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கோர்ட்டு விவாகரத்து வழங்கியது.
ஆனால் அவர்களில் 2 மகள்களும் ஊர்வசி பாதுகாப்பில் இருந்தனர்.

அதன்பின்பு தனது இரு மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தர விட வேண்டும் என்று மனோஜ் கே.ஜெயன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரண்டாவது மகள் குஞ்சாச்சாவை மட்டும் மனோஜ் கே.ஜெயனிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து ஊர்வசி கோர்ட்டு உத்தரவுக்கு பணிந்து இளைய மகளை அவரிடம் ஒப்படைத்தார்.

Comments