Thursday,14th of June 2012
சென்னை::பூலோகம் படத்தில் த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் ‘லேடி பாக்ஸர்' என்று த்ரிஷாவிற்கு பெயர் சூட்டியுள்ளாராம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவே கூறியுள்ளார்.
உனக்கும் எனக்கும் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா இணையும் படம் பூலோகம். இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். கதாநாயகி த்ரிசாவிற்கு வலுவான பாத்திரமாம். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் த்ரிஷா கூறியுள்ளதாவது,
பூலோகத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். படத்தில் என்னுடைய ரோல் ரொம்ப வெயிட்டானது. ஜெயம் ரவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக இப்படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டருக்கு பலமே நான் தான். படத்தில் என்னுடைய கேரக்டரை பார்த்து டைரக்டர் என்னை குத்துச்சண்டை வீராங்கனை என்று தான் அழைக்கிறார் என்று கூறியுள்ளார்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பூலோகம் படத்தை நவம்பர் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Comments
Post a Comment