கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday, 30th of June 2012
சென்னை::* கடந்த தீபாவளியன்று விஜய் நடித்த ‘வேலாயுதம்’, சூர்யா நடித்த ‘7ம் அறிவு’ ரிலீஸ் ஆனதுபோல் வரும் ஆகஸ்ட்டில் விஜய்யின் ‘துப்பாக்கி’, சூர்யாவின் ‘மாற்றான்’ மோதும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
* கார்த்திகா தனது பிறந்த நாளை தேனியில் நடந்த ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ ஷூட்டிங்கில் நேற்று முன்தினம் கொண்டாடினார்.
* விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்கும் அஜீத் தனது உடற்கட்டை ஏற்றுவதற்காக தினமும் ஐந்தரை மணி நேரம் ஜிம்மில் கடும் பயிற்சி செய்கிறார்.
* ‘ஹரிதாஸ்’ படத்திற்காக தனுஷ்கோடி கடல்பகுதியில் நடந்த ஷூட்டிங்கில் பட குழுவினர் விபத்தில் சிக்கியது இயக்குனர் குமாரவேலுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத திகில் அனுபவமாம்.
* ஜூனியர் என்.டி.ராமராவ் நடிக்கும் ‘பாட்ஷா’ தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக பட குழுவினருடன் இத்தாலி சென்றிருக்கிறார் காஜல் அகர்வால்.

Comments