தமன்னா, ஹன்சிகாவை வம்பிழுத்துக்கிட்டே இருப்பேன்: சந்தானம்!!!

Friday, ,June, 08, 2012
தமன்னா, ஹன்சிகா கூட பணியாற்ற ஜாலியாக இருக்கும் என்று நகைச்சுவை நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் பிசியான காமெடியன் என்றால் அது சந்தானம் தான். கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

இந்நிலையில் சந்தானம் தனது திரையலகப் பயணம் பற்றி கூறுகையில்,

என்னை உலகிற்கு அறிமுகப்படுத்தியது லொல்லு சபா தான். அந்த குழுவை மறக்கவே முடியாது. வடிவேலு சினிமாவில் இருந்து சென்றுவிட்டதால் தான் நான் முன்னுக்கு வந்துள்ளேன் என்று பலரும் கூறுகின்றனர். ஒருவரின் வீழ்ச்சி இன்னொருவரின் வளர்ச்சிக்கு காரணமாகாது. ஒரு நாள் நான் தோல்வி அடைந்தால் ஓகே மக்களுக்கு என் காமெடியை பிடிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

காமெடியன் என்பதால் ஜோடி சேரும் ஆசையெல்லாம் இல்லை. ஆனால் தமன்னா, ஹன்சிகா கூட பணியாற்றுவது ஜாலியாக இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் அவர்களை கிண்டலடித்துக் கொண்டே இருப்பேன். அவர் என்னை திட்டித் தீர்ப்பதை ரசிப்பேன் என்றார்.

அது சரி, அழகான ராட்சஷிகள் திட்டினால் யார் தான் ரசிக்க மாட்டார்கள்...

Comments