Tuesday, June,05, 2012
சிரஞ்சீவி மகன் கல்யாணத்தில் தமன்னா, ஸ்ரேயா நடனம் ஆட உள்ளனர். சினிமாவையடுத்து நட்சத்திர இரவு நிகழ்ச்சிகளில்தான் நடிகைகளின் நடன நிகழ்ச்சி நடந்து வந்தது. தற்போது பிரபல நடிகர், நடிகைகள் கல்யாண வீடுகளிலும் நடிகைகளின் குத்தாட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. சமீபத்தில் ரீமா சென் திருமண விழாவில் ஸ்ரேயா நடனம் ஆடினார். இதையடுத்து ஐதராபாத்தில் நடக்க உள்ள சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தேஜாவின் திருமணத்திலும் ஸ்ரேயா நடனம் ஆடுகிறார். கூடுதலாக தமன்னாவும், அல்லு அர்ஜுனும் நடனம் ஆட உள்ளனர்.
ஜூன் 14ம் தேதி ராம் சரணுக்கும்-உபசனாவுக்கும் திருமணம் நடக்கிறது. அதற்கு முன்னதாக தொடர்ந்து 3 நாட்கள் திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. ஜூன் 11ம் தேதி சங்கீத நிகழ்ச்சி நடக்கிறது. அன்றுதான் நடிகைகளின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12ம் தேதி இருவீட்டாரும் மணமகள் சொந்த ஊரான துமகொண்டாவுக்கு சென்று அங்குள்ள கோயிலில் சிறப்பு பூஜை நடத்துகின்றனர். முத்தாலம்மா கோயிலுக்கும் சென்று சாமி கும்பிடுகின்றனர். 13ம் தேதி பெண் வீட்டில் மணப்பெண் சடங்கு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைக்கு தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறுநாள் 14ம் தேதி மணமகன் இல்லத்தில் திருமண விழா நடக்கிறது. திருமண விழாக்களில் நடிகைகளின் டான்ஸ் நிகழ்ச்சி நடத்தும் புது டிரெண்ட் தொடங்கியுள்ளது. இதன் மூலம் நடிகைகளுக்கும் கணிசமான தொகை சம்பளமாக தரப்படுகிறது. இந்த புது டிரெண்ட் இனி திரையுலகினரின் திருமண விழாக்களில் மட்டுமின்றி, விஐபிக்கள் வீட்டு கல்யாணத்திலும் பின்பற்ற முயற்சிகள் நடக்கிறதாம்.

Comments
Post a Comment