கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Tuesday, 26th of June 2012
சென்னை::மல்லுவுட் ‘பாடி காட்’ இயக்குனர் சித்திக் அடுத்து ஜான் ஆப்ரகாம் நடிக்கும் இந்தி படம் இயக்க உள்ளார். ஆனால் அவரது கால்ஷீட் டிசம்பருக்குள் கிடைக்காவிட்டால் மோகன்லால் நடிக்கும் மலையாள படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

நடன இயக்குனர் கூல் ஜெயந்த் ‘ஜோ ஜோ’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஜோடியாக ஆண்ட்ரியா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

‘ஐ’ படத்தை ரூ.70 கோடி பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர்.

கமல் நடித்து வெற்றி பெற்ற ‘சகல கலா வல்லவன்’ பட ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் சூர்யா.

பாலிவுட்டில் ரூ.100 கோடி வசூல் தாண்டிய போட்டியில் கேத்ரினா கைப் முதலிடத்திலும் அசின் 2வது இடத்திலும் உள்ளனர்.

Comments